search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வாக்காளர்கள்"

    நாமக்கல் அருகே புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர் அவர்களின் பெயர் மற்றும் முகவரி பட்டியலில் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

    இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தனர். இவர்களில் தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா ? என கலெக்டர் ஆசியா மரியம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நாமக்கல் அருகே உள்ள மாரப்பநாய்க்கன்பட்டி பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர், குறிப்பிடப்பட்டு உள்ள முகவரியில் அவர் வசிக்கிறாரா?, பெயர் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள உஞ்சனை கிராமத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் தாசில்தார்கள் உடன் இருந்தனர்.
    புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் 9 மற்றும் 23-ந்தேதிகளில் சிறப்பு முகாமை அறிவித்துள்ளது.

    எனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், சோழவந்தான், மதுரை கிழக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் உரிய வாக்காளர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்றிட வேண்டும். வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் போன்றவற்றில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு முகாம்களில் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாவட்ட, பகுதி, நகர், பேரூர், ஒன்றிய, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் காங்கிரஸ் உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கின்றன. மெகா கூட்டணியை அமைத்து பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் தவறிவிட்டது. இந்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு புதிய வாக்காளர்களை கவரும் செயல்களில் ஈடுபட்டது. இதே நடைமுறையை பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    கர்நாடக தேர்தலில் நல்ல பலன் கிடைத்தது போல் பாராளுமன்ற தேர்தலிலும் இதற்கு பயன் இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகின்றது. இதற்காக மாணவர் காங்கிரசார் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் 15 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு 18 வயது முதல் 23 வயது ஆகிறது.

    இந்த புதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் இலக்கு வைத்துள்ளது. #Congress #RahulGandhi
    ×